இந்தியாவின் தடை செய்யப்பட்ட இணையதளங்கள் எவை?

இந்த நவீன உலகத்தில் அதில் முக்கியமாக தொழில்நுட்பத்தில் இணையத்தை பயன்படுத்தி உங்களுக்கு தேவையானவற்றை தேடுவது என்பது மிக இலகுவானது. தற்போது செய்திகளைப் படிப்பது முதல் உங்களுடைய அன்றாட வேலையை செய்வது வரை எல்லாவற்றிற்கும் இன்டர்நெட் பயன்படுத்தப்படுகிறது. பல உபயோகம் உள்ள தகவல்களை பெறுவதற்கு வலையதளங்கள் உதவி புரிகின்றன. இப்படியான சந்தர்ப்பத்தில் நமது இணையம் தடைபட்டால் அல்லது அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வோம்.

இந்தியாவில் புதிய தொழில்நுட்ப சட்டங்கள் இன்னும் பிரபல சமூக வலைத்தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகியவற்றினால் இன்னும் முழுமையாக விதிகள் ஏற்கப்படவில்லை. ஆகவே சிலவேளை இந்திய அரசாங்கத்தினால் முடக்கப்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது.

இதே சூழ்நிலையை போல், நமது அண்டைய நாடான இலங்கையில் ஒரு சில வருடங்களுக்கு முன்னர் நடந்தது. அங்கே உள்ள சில உள்நாட்டு பிரச்சினைகளினால் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டால், இதனை எவ்வாறு எதிர்கொள்வது என தெரிந்திருக்க வேண்டும். அதற்கு ஒரே தீர்வு வி பி என்  VPN இணை பயன்படுத்தி இந்த தளங்களை பயன்படுத்துவது தான்.

இச்சூழ்நிலையில் பலருக்கு விபிஎன்  VPN என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது? அது எப்படி தடை செய்யப்பட்ட வலைத்தளங்களை பார்க்க உதவும்? என்ற கேள்வி பயனர்களுக்கு எழும். அந்த வினாக்களுக்கான விடைகளை தற்போது பார்க்கலாம்.

விபிஎன்  VPN குறித்து நாம் தெரிந்து கொள்வதற்கு முன்னர் நீங்கள் தேடும் தகவல்கள் எப்படி இணையத்தை சென்றடைகின்றன தெரிந்து கொள்வோம். முதலில் உங்களுடைய லேப்டாப், கணினி அல்லது மொபைல் போன் ஆகியவற்றின் மூலம் நீங்கள் தகவல்களை தேடுபவராயின், உங்களுடைய சாதனத்திற்கு ஐபி முகவரி என்ற எண் அளிக்கப்படும். இது இந்த முகவரி உங்களுடைய தரவுகளை இணையத்துடன் இணைக்கும்.

இதை இன்னும் தெளிவாக விளக்குவதாயின், அதாவது நீங்கள் ஒரு கூட்டம் நிறைந்த இடத்தில் இருக்கும் போது உங்களை ஒரு நபர் எப்படி மற்ற நபர்களிடமிருந்து அடையாளப்படுத்த முடியும்? உங்களுடைய பெயர் அல்லது உங்களுக்கு தனித்துவமான ஏதாவது ஒரு இலக்கத்தை வைத்து கூற முடியுமெனில் அவ்விலக்கமே, ஐபி முகவரி ஆகும்.

உங்கள் வைஃபை பயன்பாட்டின் போது ஒரு முகவரி இருக்கும் ஆனால் நீங்கள் மொபைல் டேட்டா பயன்படுத்தப்படும் போது வேறு ஒரு முகவரியில் இருக்கும்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இணையதளங்கள் எவை?

பெரும்பாலான நாடுகள் தனது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு முரணான வகையில் உள்ள சில இணையதளங்களை முடக்கி வைத்திருக்கின்றன.

இந்தியாவில் மிக முக்கியமாக தடை செய்யப்பட்ட இணையதளங்களாவன:

1) ஆபாச இணையதளங்கள்.

2) எஸ்கார்ட் சேவைகளை வழங்கும் இணையதளங்கள்.

3) திருட்டு உள்ளடக்கத்தை வழங்கும் அல்லது திருட்டு உள்ளடக்கத்தை பதிவிறக்கும் வலைத்தளங்கள் முற்றுமாக இந்திய அரசால் தடை செய்யப்பட்டிருக்கின்றது.

4) ஜிஎஸ்டி செலுத்தாத தளங்கள்.

5) மத வெறுப்பை காட்டுவது அல்லது அதை ஊக்குவிப்பது சம்பந்தமாக இணையதளங்கள்.

6) அனேக சீன இணையதளங்கள்.

தற்போது இந்தியாவில் அநேக சீன வலைத்தளங்கள் மற்றும் சீன தயாரிப்பு செய்திகள் மிக ஆபத்தானவை என இந்திய அரசால் இனங்காணப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக டிக் டாக், யூசி வலைதளங்கள் ஆகியன பரவலாக அதிக மக்களால் பாவிக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலமாக இந்தியாவின் தனிப்பட்ட தரவுகள் திருடப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு இந்த சேவைகளை அதிரடியாக நீக்கி உள்ளது.

இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள இணையத்தளத்தை திறக்கும் போது என்ன நடக்கும்?

தடை செய்யப்பட்டுள்ள இணையதளத்தை திறக்கும் போது பயனர்களுக்கு ஒன்று மாறாது. ஏனெனில் உங்கள் வி பி என் மறைக்கப்படாவிட்டால் அந்த வலைத்தளத்தை நீங்கள் அணுக முடியாது. மேலும் இந்த வலைத்தளதம் உங்கள் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியும் உங்கள் திரையில் காண்பிக்கப்படும். நீங்கள் அந்தத் தளத்தை பார்க்க விரும்பினால், முதலில் நீங்கள் உங்கள் விபிஎன்  VPN (ஜெவல் வி பி என் JEWEL VPN) மூலமாக உங்கள் ஐபி அட்ரஸை (IP address) மறைக்க வேண்டும். பின் பயனர்கள் வலைய தளத்தை பார்வையிடலாம்.

பல பேருடைய எண்ணப்படி, நீங்கள் முடக்கப்பட்ட இணையதளத்தை பார்வையிட்டால் உங்கள் இடத்தை கண்காணித்து  சைபர் கிரைம்  கைது செய்யும் எனும் நம்பிக்கை உள்ளது. அது முற்றிலும் தவறான கருத்து.  VPN இணைக்கப்பட்டிருந்தால் உங்களது இருப்பிடம், வேறொரு நாடாக மாற்றப்படும். ஆகவே யாரும் உங்களது இடத்தை கண்காணிக்க முடியாது.

“தடுக்கப்பட்ட தளமாக இருந்தாலும், எந்தவொரு இணையதளத்தையும் பார்ப்பது, பதிப்புரிமைச் சட்டம், 1957 அல்லது தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 ஆகியவற்றின் கீழ் சட்டவிரோதமானது அல்ல” என்று பதிவு செய்யப்பட்ட மென்பொருள் சுதந்திர சட்ட மையத்தின் ஆலோசகர் பிரசாந்த் சுகதன் விளக்கினார். இதன் மூலமாக விபிஎன் இந்திய நாட்டில் பயன்படுத்துவது சட்ட விரோதமானது அல்ல என்ற முடிவுக்கு வரலாம்.

ஆன்லைன் சென்சார்சிப்:

பல நாடுகள் பல இணையதளங்களின் ஊடுருவலை தடுத்துள்ளனர். இத்தகைய கட்டுப்பாடுகளை நீக்க  விபிஎன் VPN உங்களுக்கு உதவுகிறது.

அரசாங்க கட்டுப்பாடுகள் இல்லாமல் தடை செய்யப்பட்டுள்ள இணையதளங்களுக்கு நீங்கள் பார்வையிட விபின் இணை ( ஜெவல் வி பி என்JEWEL VPN) பயன்படுத்தலாம்.

லொகேஷன் ஸ்பூஃபிங்:

லொகேஷன் ஸ்பூஃபிங் என்பது நீங்கள் இருக்கும் இடத்தை போலியாக காட்டுவது அல்லது மறைப்பது ஆகும். உங்கள் இருப்பிடத்தை மறைப்பதற்கான எளிய வழிகளில் ஒன்று விபி எண்ணை பயன்படுத்துவது விபிஎன் வேறொரு நாட்டில் உள்ள சேர்வருடன் இணைக்கவும் உங்களை அனுமதிக்கிறது

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *